2012 Awards |
2012ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழில் நீண்டகாலமாக எழுதிவரும் முக்கிய எழுத்தாளரான நாஞ்சில் நாடன் அவர்களுக்கு இந்த வருடம் வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் அறக்கட்டளையான தமிழ் இலக்கியத் தோட்டம் வருடாவருடம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் பரிசுப்பணமாக 2500 டொலர்கள் மதிப்பும் கொண்டதாகும். சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம், அம்பை, கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன், எஸ்.பொன்னுத்துரை, எஸ். ராமகிருஷ்ணன் ஆகியவகளைத் தொடர்ந்து இம்முறை இந்த விருதுக்கு உரியவராக 25 வருடங்களுக்கு மேல் தமிழுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவரான நாஞ்சில் நாடன் அவர்கள் தேர்வாகியிருக்கிறார்.
நாஞ்சில் நாடன் இந்தியாவின் சகல பாகங்களுக்கும் பயணித்தவர். பயணத்தில் மிகவும் ஆர்வமானவர். இருப்பினும் இவர் எழுத்து நான்சில் நாட்டு வாசனையை இழந்ததே கிடையாது. ஒரு மண்ணின் இயல்பான வாசனையை இவரைவிட வேறொருவர் இத்தனை தெளிவுற வெளிப்படுத்தியிருக்கமுடியும் என்று தோன்றவில்லை. நாஞ்சில் நாடனென்ற பெயருக்கு பொருத்தமாக ஒரு மண்ணின் சகல வாசனைகளையும் தொடர்ந்து அள்ளித் தெளிப்பது அந்த மண்ணுக்கும் மக்களுக்கும் கிடைத்த பெருமை. இவருடைய புதினங்கள் கட்டுரை கவிதைகள் எங்கேயும் இந்த வாசனை விரவிக்கிடக்கும். எழுத்திலே அறவுணர்வு முக்கியம். உணர்ச்சிவயமானவர். கட்டுரைகளில் அநியாயத்தைக் கண்டு அவர் பொங்குவதை காணலாம். அவர் எழுத்தின் அடிநாதம் மனித நேயம்தான்.
இவருக்கு 2010ல் சூடிய பூ சூடற்க சிறுகதை தொகுப்பிற்கு சாகித்ய அகாடமி பரிசு கிடத்திருக்கிறது. இவருடைய எழுத்துக்கள் ஆங்கிலம் மலையாளம் பிரெஞ்சு போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. சமீபத்தில் இவர் கசை எழுதிய பரதேசி திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருது வழங்கும் விழா ரொறொன்ரோவில் 15 ஜூன் 2013 மாலை சிறப்பாக நடந்தது. பேராசிரியர் சுகிர்தராஜா விருதை வழங்க திரு நாஞ்சில் நாடன் பெற்றுக்கொண்டார்.
Sponsored by Vaithehi Balamurugan
Sponsored by Dr Oppilamani Pillai
Sponsored by Jay&Lalitha Jayaraman and R.Rabendravarman
Sponsored by Bairavee Ranjith
Sponsored by Nandakumar Mailvaganam
Sponsored by Dr.Thushiyanthy and Dr.S.Sriharan
Sponsored by Vincent de Paul and Margie
Sponsored by Kumar Ratnam
Sponsored by SuRa Memorial Fund Kalachuvadu Trust
Sponsored by Bahir Vivekanand B.Sc,D.Ch