2009 Awards |
2009ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் ஆய்வுகளில் நீண்ட காலமாக ஈடுபட்டுவரும் இருவருக்கு வழங்கப்படுகிறது. தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் 1500 டொலர் மதிப்பும் கொண்டது. இம்முறை இந்த விருதை கோவை ஞானி என்று அழைக்கப்படும் கி.பழனிச்சாமியும், ஐராவதம் மகாதேவனும் பெறுகிறார்கள். பரிசுப் பணம் பிரித்து கொடுக்கப்படாமல் இருவருக்குமே ஆளுக்கு 1500 டொலர் வழங்கப்படுகிறது.
கோவை ஞானி
கோவை ஞானி என்று அழைக்கப்படும் கி.பழனிச்சாமி ஒரு தமிழாசிரியர். கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழிலக்கியத்தில் தீவிர சிந்தனையாளராகவும், கோட்பாட்டாளராகவும் திறனாய்வாளராகவும் இயங்கி வருகிறார். இவரை "இடைவிடாது இயங்கிவரும் ஆய்வு அறிஞர் ஞானிக்குள் தமிழ் இயங்குகிறது" என்று வர்ணிப்பார்கள். தமிழின் நவீன இலக்கியங்களை மார்க்ஸிய நோக்கில் ஆராய்ந்தவர்களில் முதன்மையானவர். நுட்பமான இலக்கிய உணர்வும், நவீன இலக்கியங்களை , திறந்த மனத்துடன் அணுகும் பண்பும் கொண்டவர். இவர் ‘நிகழ்’ என்ற சிற்றிதழை பல ஆண்டுகளாக தமிழில் புதிய இலக்கியத்திற்கான களமாக நடத்தி வந்தார். இதுவரை இவர் 24 திறனாய்வு நூல்களையும் 12 தொகுப்பு நூல்களையும் 4 கட்டுரை தொகுதிகளையும் இரண்டு கவிதை நூல்களையும் எழுதியிருக்கிறார். இதுதவிர தொகுப்பாசிரியராகவும் பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். இவர் எழுதிய புத்தகங்களில் "இந்தியாவில் தத்துவம், கலாச்சாரம்" "கடவுள் ஏன் இன்னனும் சாகவில்லை" "தமிழ் நாவல்களில் தேடலும் திரட்டலும்" "மறுவாசிப்பில் தமிழ் இலக்கியம்" ஆகியவை முக்கியமானவையாக கருதப்படுகின்றன. இவருடைய நீண்ட கால தமிழ் சேவைக்காக "விளக்கு விருது", "தமிழ் தேசியச் செம்மல் விருது", "தமிழ் தேசியத் திறனாய்வு விருது", "பாரதி விருது" ஆகியவை வழங்கப்பட்டிருக்கின்றன.
ஐராவதம் மகாதேவன்
ஐராவதம் மகாதேவன் திருச்சியில் உள்ள வளனார் கல்லூரியிலும் பின்னர் சென்னைப் பல்கலைக் கழகத்திலும் கல்வி பயின்றார். இந்திய ஆட்சிப் பணியில் 33 வருடங்களும், தினமணி இதழின் ஆசிரியராக நாலு வருடங்களும் பணி புரிந்தார். இவருடைய தினமணி காலத்தில் தமிழ் மொழியின் பரவலான எழுத்துபாவனை தூய தமிழ்ச்சொற்களின் அறிமுகத்தால் பெரும் மாற்றமடைந்தது. தமிழ் எழுத்துக்களின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்து இவர் நடத்திய நீண்ட கால ஆராய்ச்சிகளுக்காக சர்வதேச புகழ் இவரை தேடி வந்தது. கல்வெட்டு ஆராய்ச்சிகளில் இவர் காட்டிய அர்ப்பணிப்பும் உழைப்பும் தொல்தமிழ் குறித்தும் பண்பாடு, வரலாறு குறித்தும் தீர்க்கமான முடிவுகளை எட்ட உதவியிருக்கிறது. இவர் நாம் வாழும் காலகட்டத்தின் மாபெரும் ஆய்வாளர் என்பதை பல்துறை அறிஞர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். பிராமி எழுத்துமுறை தமிழகத்தில் கி.மு மூன்றாம் நூற்றாண்டில் பரவியது என்பதையும் அந்த நூற்றாண்டிலேயே எழுத்தறிவு தோன்றியது என்பதையும் ஆராய்ச்சி மூலம் நிறுவியிருக்கிறார். அரசவை, மேனிலை மக்கள், வழிபாட்டு தலங்கள் மத்தியில் மட்டுமே எழுத்தறிவு என்ற நிலை இல்லாமல் எல்லா நிலைகளிலும் எல்லா மக்களிடையேயும் எழுத்தறிவு காணப்பட்டது என்பது இவருடைய ஆராய்ச்சியிகளின் முக்கியமான முடிவு.. இவர் எழுதியுள்ள நூல்கள்

Sponsored by Vaithehi Balamurugan
Sponsored by Vaithehi Balamurugan
Sponsored by Dr Oppilamani Pillai
Sponsored jointly by Jay & Lalitha Jayaraman and R.Rabendravarman
Sponsored by Dr.Thushiyanthy and Dr.S.Sriharan
Sponsored by Nandakumar Mailvaganam
Sponsored by SuRa Memorial Fund Kalachuvadu Trust
Sponsored by Bahir Vivekanand B.Sc,D.Ch