2016 2015 2014 2013 2013 2012 2011 2010 2009 2009 2008 2007 2006 2005 2004 2003 2002 2001

Menu


The Tamil Literary Garden is unique in being the only one in the world dedicated to the promotion of Tamil internationally. Though Tamil is an ancient language, one of the oldest in the world with significance to global literature, scant little has been done to date to actively promote or celebrate the language and contemporary authors who have contributed to its growth. Hence the focus of this organization is on supporting translation of Tamil literature, scholarship to students, revival of ancient Tamil Theatre, sponsoring lecture series, commissioning publications, book launches, and workshops. In its annual, globally awaited awards ceremony Tamil Literary Garden recognizes significant achievements in Tamil in a number of genres and fields including Lifetime Achievement in Tamil. Donations to the organization are crucial to keep Tamil alive and to bring the best of what we have to offer to the world. It is a charitable organization and your donations are tax-deductible.

Donate Now Through CanadaHelps.org!
Awards

தமிழ் இலக்கியத் தோட்ட இயல் விருதுகள்

 

2001ம் ஆண்டு இயல் விருது

கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள் என்று கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகப் படைத்து தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவராக நின்று வழிநடத்தி தமிழ் பணியாற்றிய திரு. சுந்தர ராமசாமி அவர்களுக்கு அவருடைய வாழ்நாள் தமிழ் இலக்கிய சேவையைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது.  [More...]

 

 

2002ம் ஆண்டு இயல் விருது

மணிக்கொடி பரம்பரையைச் சேர்ந்தவரும், மூத்த இலக்கியவாதியும், கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக தீவிர தமிழ் தொண்டாற்றி வந்தவருமான திரு கே. கணேஸ் அவர்களுக்கு அவருடைய வாழ்நாள் தமிழ் இலக்கிய சேவையைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது. [More...]

 

 

2003ம் ஆண்டு இயல் விருது

கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கியம், நாடகம், இசை, சினிமா, சிற்பம், ஓவியம் ஆகிய பலதுறை எழுத்துக்களில் தீவிரமாக இயங்கிவந்த திரு. வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கு அவருடைய வாழ்நாள் தமிழ் இலக்கிய சேவையைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது.  [More...]

 

 

 

2004ம் ஆண்டு இயல் விருது

ஈழத்து நூற்பதிப்புத் துறையில் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தீவிரமாக இயங்கி தமிழுக்கு பெரும் தொண்டாற்றிவரும் திரு.இ.பத்மநாப ஐயருக்கு அவருடைய வாழ்நாள் தமிழ் இலக்கிய சேவையைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது.

[More...]

 

2005ம் ஆண்டு இயல் விருது

கடந்த பல ஆண்டுகளாக பழம் தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரும், கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் தமிழ்துறை தொடங்கி அதில் பேராசிரியாராக பணியாற்றியவரும், 2004இல் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதற்குக் காரணமானவருமான திரு. ஜோர்ஜ் ஹார்டுக்கு அவருடைய வாழ்நாள் தமிழ் இலக்கிய சேவையைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது. [More...]

 

 

2006ம் ஆண்டு இயல் விருது

தமிழ் நாடகக் கலைக்காகப் பல ஆண்டுகள் பாடுபட்டு அதை உலக மட்டத்திற்கு உயர்த்தி, நாடகத்திற்கும், தமிழுக்கும், ஈழத்துக்கும் புகழ் சேர்த்தவரான திரு.தாசீசியஸ் அவர்களுக்கு அவருடைய வாழ்நாள் தமிழ் இலக்கிய சேவையைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது. [More...]

 

 

 

2007ம் ஆண்டு இயல் விருது

கடந்த இருபது ஆண்டுகளாக நவீன தமிழ் புனைகதைகள், கவிதைகள் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டு தமிழின் சிறப்பை உலகறியச் செய்துவரும் திருமதி.லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம் அவர்களுக்கு அவருடைய வாழ்நாள் தமிழ் இலக்கிய சேவையைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது.  [More...]

 

 

2008ம் ஆண்டு இயல் விருது

கடந்த நாற்பது வருடங்களாக தமிழ் எழுத்துலகில் மட்டுமன்றி தன் செயற்பாட்டை பெண்கள் வாழ்க்கையின் பல்வேறு துறைகளுக்கும் விரிவுபடுத்தி தன் பதிவுகளை இலக்கியத்திற்கும் அப்பால் கடத்திய அம்பை அவர்களுக்கு அவருடைய வாழ்நாள் இலக்கிய சேவையைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது.  [More...]

 

 

2009ம் ஆண்டு இயல் விருது

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தீவிர சிந்தனையாளராகவும், கோட்பாட்டாளராகவும், திறனாய்வாளராகவும் இயங்கி, நவீன தமிழ் இலக்கியங்களை மார்ஸிய நோக்கில் ஆராய்ந்த கோவை ஞானி என்று அழைக்கப்படும் கி.பழனிச்சாமி அவர்களுக்கு அவருடைய வாழ்நாள் தமிழ் இலக்கிய சேவையைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது.  [More...]

 

 

2009ம் ஆண்டு இயல் விருது

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் எழுத்துக்களின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்து இவர் நடத்திய ஆராய்ச்சிகளுக்காகவும், தொல் தமிழ் குறித்து தீர்க்கமான முடிவுகளை எட்ட உதவியிருக்கும் கல்வெட்டு ஆராய்ச்சிகளுக்காகவும் திரு.ஐராவதம் மகாதேவன் அவர்களுக்கு அவருடைய வாழ்நாள் தமிழ் இலக்கிய சேவையைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது.  [More...]

 

 

2010ம் ஆண்டு இயல் விருது

கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள், விமர்சனங்கள், மொழிபெயர்ப்புக்கள் என தமிழ் இலக்கியத்தின் பல துறைகளில் பங்களித்தவரும், மூத்த இலக்கியவாதியும், ஈழத்து தமிழ் இலக்கியத்தை உலகளாவிப் பரப்புவதில் முன்னிற்பவருமான திரு. எஸ்.பொன்னுத்துரை அவர்களுக்கு அவருடைய வாழ்நாள் தமிழ் இலக்கிய சேவையைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது. [More...]

 

 

2011ம் ஆண்டு இயல் விருது

நவீனத் தமிழின் முக்கிய அடையாளங்களில் ஒருவராகத் திகழும் திரு எஸ். ராமகிருஷ்ணன் கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், விமர்சனங்கள், நாடகங்கள், குழந்தை இலக்கியம், சினிமா என பல இலக்கிய வகைப்பாடுகளில் இயங்கியவர். உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரும் இயக்குநருமான மகேஷ் டத்தானி பரிசை வழங்க எஸ்.ராமகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். [More...]

 

 

2012ம் ஆண்டு இயல் விருது

2012ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழில் நீண்டகாலமாக எழுதிவரும் முக்கிய எழுத்தாளரான நாஞ்சில் நாடன் அவர்களுக்கு இந்த வருடம் வழங்கப்பட்டிருக்கிறது[More...]

 

 

2013ம் ஆண்டு இயல் விருது

2013ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் எழுத்தாளர், தமிழ் திரைப்பட வரலாற்றாளர் மற்றும் சூழலியல் ஆர்வலர்  திரு சு. தியடோர் பாஸ்கரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. [More...]

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click Here to see more about 2015 Awards